வெள்ளி, 12 ஜூலை, 2013

அந்த 30 நாள்கள்

-புதுசுரபி

அண்மையில் ஒரு இணையதளம் வழியாக அமெரிக்கப் பேச்சாளர்ஒருவரின் உரையினைக் கேட்டுக்கொண்டிருந்தேன்அவர் பேச்சு மிகசுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடையநினைக்கிறீர்களோபுதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள்போதும்நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறிவிடுவீர்கள்நான் உத்தரவாதம்.நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர்,ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின்நாவலாசிரியர்நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பதுநாளில் நடந்த அதிசயம்” என்றும்இதை அவர் மாபெரும் அமெரிக்க தத்துவஞானிமோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றி வெற்றி பெற்றதாயும் மேற்கோளிட்டார்.