பெfமன் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.
முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?
சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த படங்கள், துனிசிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. விளைவோ, கொலை மிரட்டல் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கொண்டார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட பெfமன் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமில்லை (??), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை (!!) என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை "அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக (???!!!), உலகின் பல்வேறு பகுதிகளில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தது.
இவர்களின் போராட்டமே விரும்பத்தகாத வகையில் தான் இருக்கின்றது என்றாலும் இதனைத் தாண்டிய நடவடிக்கைகளிலும் பெfமன் அமைப்பினர் ஈடுபட்டனர். அதாவது, பிரெஞ்சு தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளிவாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையை விளக்கும் "இறைவன் ஒருவனே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் (லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்)" என்ற வாசகத்தை தாங்கிய பேனரை தீயிட்டு கொளுத்தினர்.
பேனரை
எரிக்கும் பெfமன் அமைப்பினர்.
நிச்சயம் இவர்களுடைய நடவடிக்கைகள் பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் செயல்களல்ல, மாறாக ஒரு மார்க்கத்தின் மீதான வெறுப்புணர்வு மட்டுமே. இதனை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தவும் செய்தன. இஸ்லாமொபோபியாவால் பெfமன் அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டின.
இப்படியான சூழலில் தான் பெfமனுக்கு எதிரான தீவிர பதிலடியை கொடுக்க ஆயத்தமாயினர் முஸ்லிம் பெண்கள். பதிலடி என்றால் சும்மா இல்லை, அது ஒரு அதிரடியான திட்டம். பெfமனை வெலவெலுத்து போகச்செய்யும் திட்டம்.
அப்படி என்ன திட்டம் என்று பார்ப்பதற்கு முன், இந்த திட்டத்திற்கு பின்னால் இருந்த சகோதரியை பார்த்து விடுவோம். இவருடைய பெயர் சோபிfயா அஹ்மத். பிரிட்டனின் பெர்மிங்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இவர். "அரைநிர்வாண ஜிஹாத் நாள்" என்று அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தினால் கண்ணியமான முறையில் போராட நாம் ஒரு நாளை ஏற்படுத்துவோம். அதற்கு பெயர் "பெருமைமிகு முஸ்லிம் பெண்கள் (Muslimah Pride Day) தினம்".
இந்த திட்டத்தின்படி, தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக்கொள்ளும் பெண்கள், அதற்கேற்றப்படி வாசகங்களை அமைத்து தங்கள் புகைப்படத்துடனோ அல்லது இல்லாமலோ, muslimahpride@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பினால், இந்த நிகழ்வுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகப்பக்க பக்கத்தில் அந்த செய்தியை பதிவேற்றி விடுவார்கள் (அந்த பக்கத்தை <<இங்கே>> காணலாம். போராட்டம் குறித்த தகவல்களை <<இங்கே>> பெறலாம்).
இதுபோல, ட்விட்டரிலும் #MuslimahPride மற்றும் #Femen என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் செய்திகளை அனுப்புமாறு முஸ்லிம் பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படியாக அறிவிக்கப்பட்டது தான் தாமதம், இந்த முயற்சிக்கு அளப்பரிய ஆதரவை அள்ளி வழங்கிவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். "பெfமனுக்கு எதிரான முஸ்லிம் பெண்களின் போராட்டம்" என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடங்கி நம்மூர் ஜீ நியூஸ் வரை இந்த செய்தியை பெரிய அளவில் பேசின.
இந்த போராட்டத்திற்கு வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு..
எங்களின் குரலை
பெfமன் திருடிக் கொண்டது.
சுதந்திரத்தின்
உண்மையான பொருளை இஸ்லாமை
தழுவியதிலிருந்து உணர்ந்துக் கொண்டேன்.
நிர்வாணம் என்னை
விடுவிக்காது. மேலும், நான் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் இல்லை.
எனது அறிவாற்றலைக்
கொண்டு என்னை எடைப்போடுங்கள்
என் உரிமையை
நிலைநாட்ட நீங்கள் தேவையில்லை
இவர் என்னுடைய
சகோதரி. ஹிஜாப் அணிவது அவருக்கான சுதந்திரம்.
எனக்கு
சுதந்திரமளித்தது இஸ்லாம்.
என் உடலை மறைக்க
எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை
அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்.
நான் அடிமைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தெரிந்தால் அதற்காக
வருந்துகின்றேன். அதே நேரம், என்னை மன்னித்து விடுங்கள், ஏனென்றால், அப்படியாக
அடிமைப்பட்டு இருப்பதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.
நிர்வாணம் சுந்தந்திரமில்லை. உங்களின் ஒழுக்கத் தத்துவம்
எங்களுக்கு தேவையுமில்லை.
சுதந்திரம் என்பது உடல் சார்ந்ததல்ல, அது உள்ளம் சார்ந்தது.
நாங்கள் முஸ்லிம்கள், இஸ்லாமை விரும்புபவர்கள்.
நீங்கள் என்னை
விடுவிக்க தேவையில்லை. நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.
சுதந்திரமானவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க
முடியாது.
இதுமட்டுமல்லாமல், பெfமன்
அமைப்புக்கு முஸ்லிம் பெண்கள் எழுதிய வெளிப்படையான கடிதம் அவர்கள் மீதான கடுமையான
விமர்சனத்தை முன்வைத்தது. பெண்களின் விடுதலை என்ற போர்வையில் காலனி ஆதிக்க இனவெறியை
மட்டுமே பெfமன் வெளிப்படுத்துவதாக சாடியுள்ள அந்த கடிதம், நாங்கள்
முஸ்லிம்கள் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறியது (அந்த கடிதத்தை முழுமையாக
<<இங்கே>> படிக்கலாம்). 'இஸ்லாமில் பெண்களின் நிலை' குறித்த
வெளிப்படையான உரையாடலுக்கும் பெfமன் அமைப்பினரை அழைத்துள்ளனர் முஸ்லிம் பெண்கள்.
ஆனால் இந்த நிகழ்வுகளில் எனக்கு புரியாத
விசயங்கள் இரண்டு. நிர்வாண போராட்டங்கள் எப்படி ஒருவருடைய இலக்கை அடைய
வழிவகுக்கும்? முகம் சுளிக்க வைத்து இலக்கிலிருந்து தூரப்படுத்த மட்டுமே உதவும்
என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், முஸ்லிம் பெண்களை விடுவிக்க செய்யும் போராட்டம்
என்று கூறிவிட்டு, தங்களை எதிர்க்கும் பெண்களை குர்ஆனினால் மூளைச் சலவை
செய்யப்பட்டவர்கள் என்று தூற்றுவது எப்படி பெண்களை மதிப்பதாய் அல்லது அவர்களுக்கான
உரிமையை வழங்குவதாய் மையும்?
முஸ்லிம்
பெண்களின் அதிரடியான செயல்திட்டத்தால் பெfமன் அமைப்பின் கண்ணியமற்ற போராட்டங்கள்
வீழ்த்தப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சகோதரிகளே, உங்களின் விவேகமான அணுகுமுறையால்
நாங்கள் பெருமைக் கொள்கின்றோம். KEEP GOING....
இறைவனே எல்லாம்
அறிந்தவன்...
Please Note:
இந்த நிகழ்வு இன்னும் முடிவடையவில்லை. தங்கள் செய்திகளை அனுப்ப விரும்பும் சகோதரிகள், மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
My sincere thanks to:
1. Sister Asma (for
french and Italy translations)
References:
2. Muslim women send message to Femen - Aljazeera stream, 5th April 2013. link
3. Muslim Women Against Femen - Facebook page. link
4. Muslim Women Against Femen..Muslimah Pride Day - Event page. link
5. Muslim Women Against FEMEN - Facebook
group. link
7. Femen - Wikipedia. link
8. Femen's Topless Jihad Day protested by
Muslim women group - Zee News, 7th April 2013. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.
தொடர்புடைய பதிவுகள்:
,
,
,
,
,
Tweet | |||||
Labels:
FEMEN, அனுபவம், சமூகம், செய்திகள், பெண்ணுரிமை, முஸ்லிம் பெண்கள்
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.என்னமோ சகோதரர் இஸ்லாம் மருமலற்சியடைய தொடங்கிய காலம் தொட்டு இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களின் முயற்சிகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை நமக்கு வெற்றியாகவும் அதை இஸ்லாம் மென்மேலும் சிறப்புற்று வளர்வதற்கும் ஒரு வாய்ப்பாகவுமே மாற்றி தந்திருக்கிறான் என்பதை வரலாற்றை படிக்க ஆரம்பித்தால் அனைவருக்கும் எளிதில் புரிந்து விடும்.அது போல் தான் இந்த பெ(f (மின் அமைப்பும்.இவர்கள் இஸ்லாமை எதிர்ப்பதாக நினைத்து எம் சகோதரிகள் பல பேரை இஸ்லாமிய அழைப்பு பனி செய்ய ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்துவிட்டார்கள் எனபது தான் உண்மை.
வ அலைக்கும் சலாம்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
ஒரு வாசகம் என்றாலும் நெருப்பு வாசகம் மொத்த எதிர்ப்பு போராட்டத்தையும் அடித்து நொருக்கிய வாசகம் வாழ்த்துகள் சகோதரிகளே
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அறிவு, திறமை, உழைப்பு இப்படி எதுவுமே இல்லாமல் ஊடக கவனத்தை தன்பக்கம் திருப்பும் வெறியோடு சில அரை லூசுகள் எதையும் செய்யும். அதற்கு நாம் முக்கியத்துவம் தர தேவை இல்லை..!
இவர்களிடம் நான் பகிரங்க சவால் விடுக்கிறேன்.
இப்படி டாப்லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இவர்கள்...
இதேபோல எப்போதும் இருப்பார்களா... இளமை கவர்ச்சி தளர்ந்து வயதானானாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!?!?!
ஒருபோதும் மாட்டார்கள்..!
எனவே...
இந்த கொள்கை அற்ற அரை லூசுகளை நாம் முழு லூஸ்ல விட்டுட்டு வேற வேலை பார்ப்போம் சகோ..! இவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது 'நமது கண்டு கொள்ளல்'ஐத்தான்..! எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தறாமல் இவர்களை முறியடிப்போம்..! இதுதான்... வெரி குட் கவுன்ட்டர் அட்டாக்..!
வ அலைக்கும் சலாம்,
//இப்படி டாப்லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இவர்கள்...
இதேபோல எப்போதும் இருப்பார்களா... இளமை கவர்ச்சி தளர்ந்து வயதானானாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!?!?!
ஒருபோதும் மாட்டார்கள்..! //
மிகச் சரியாக சொன்னீர்கள்.
//இந்த கொள்கை அற்ற அரை லூசுகளை நாம் முழு லூஸ்ல விட்டுட்டு வேற வேலை பார்ப்போம் சகோ..! இவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது 'நமது கண்டு கொள்ளல்'ஐத்தான்..! எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தறாமல் இவர்களை முறியடிப்போம்..! //
பெமன் அமைப்பின் விளம்பரம் குறித்து அறியாதவர்கள் அல்ல முஸ்லிம் பெண்கள். பெமனுக்கு எழுதிய கடிதத்தில் இவர்களின் விளம்பரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். அதே நேரம், பெமனை அம்பலப்படுத்த இது தான் சரியான தருணம் என்று கருதியதே முஸ்லிம் பெண்களின் நடவடிக்கைகளுக்கு காரணம். ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். பெமனை அம்பலபடுத்தியாகிவிட்டது, முஸ்லிம் பெண்களின் கண்ணியமான போராட்ட முறைகளை வெளிப்படுத்தியதாகவும் ஆயிற்று. இந்த போராட்டத்தால் முஸ்லிம் பெண்கள் சாதித்தது அதிகம். அந்த வகையில் இது ஒரு மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட விவேகமான போராட்டமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
FEMEN அமைப்பு, ஏன் தான் வெலெ, வெ(ளு)லுத்துப் போகாது!!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
My BLOG: http://pnonazim.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி..
மெய்யாகவே மிகச் சிறந்த பதிவு. 'முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது' என்று இலங்கையில் சில புத்த பிக்குகள் போராட்டம் நடத்தி வருவதை அறிவீர்கள். அவர்களுக்கு எமது இஸ்லாமியப் பெண்களின் இத்தகு போராட்டம் நல்ல சிந்தனைகளைக் கொடுக்குமென நம்புகிறேன். தங்களின் அனுமதி இல்லாமலேயே இதனை எனது தளத்திற்கு பின்னூட்டங்களுடன் எடுத்துச் செல்கிறேன். ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் கூறுங்கள். எனது தளத்திலிருந்து நீக்கிக் கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
சகோதரன், எஸ்.ஹமீத்.
http://ithayaththinoli.blogspot.co.uk
அஸ்ஸலாமு அலைக்கும்
எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. ஜசாக்கல்லாஹ். இலங்கை முஸ்லிம்கள் தாங்கள் சந்திக்கும் அசாதாரண நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றேன். உலகளாவிய முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
ஊக்கத்திற்கு நன்றி..
ஊக்கத்திற்கு நன்றி.
பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு என்பது எந்த முறையில் வாழ்ந்தால் அமையும் என்ற விதியை ஏற்படுத்தியவன் அல்லாஹ்.. விளம்பரங்கள், சதிகள் வெல்லுவதைப் போலவே மாயையை ஏற்படுத்தும்.. ஆனால் இறுதியில் விதியை சதியால் வெல்ல முடியாது என்ற தத்துவத்தை உலகம் விளங்கிவிடும்..
இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் தனது இஸ்லாமிய போதனையை ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள அரேபியா பெண்களை ஒரு போகப்பொருளாகத்தான் நடாத்தி வந்தது. இன்று பணம் படைத்த முதலீட்டாளர்களின் விளம்பர மோகப் பொருளாக பெண்கள் எப்படி அடிமைபடுத்தப்பட்டு இருக்கின்றார்களோ அதே போல, அக்காலத்தில் தனது இச்சைக்கு அடிமையான ஒரு அடிமையாக பெண்கள் நடாத்தப்பட்டு வந்தார்கள். இஸ்லாத்தில் ஆரம்பமாக நுழைந்தவர் கூட ஒரு பெண் என்பதனை இந்த விளம்பர விபச்சாரிகள் தெரியாமல் இருக்கிறார்களோ என்னவோ?. உலகில் பெண்களுக்குரிய அழகையும், கவர்ச்சியையும் பிரித்துக் காட்டியது இஸ்லாம் தான். பெண்களுக்குரிய சுதந்திரம் என்பது எந்த அடிப்படையில் அமைந்தால் அவள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பாள் என்பதனை theoryயில் மாத்திரம் வைக்காமல் practical ஆகக் காட்டியதும் இஸ்லாம் தான். இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய நபிகளார் சொன்ன இந்த முன் அறிவித்தலைப் பாருங்கள் "ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒரு பெண் ஸன்ஆ என்ற இடத்திலிருந்து ஹலரல்மௌத் வரை அல்லாஹ்வின் பயத்தைத் தவிர வேறு எந்த பயமுமின்றி தனது ஒட்டகத்தோடும், ஆபரனங்கலோடும் தனியாக பயணித்து வருவாள்".. நபிகளாருடைய நடந்தது. இது பெண்களுக்கு ஒரு சமூக வாழ்க்கையை, சுதந்திரத்தை கொடுத்தது என்பதற்கு ஒரு சாட்சி.
தற்காலத்தில் திறந்த மேனியாகச் சுற்றும் பெண்களிடம் நான் கேட்பது நீங்கள் தொடுக்கும் விளம்பரங்கள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாக நீங்கள் நினைத்தாலும் அல்லாஹ்வின் தூதர் சொன்ன இந்த வாக்குறுதியை இஸ்லாம் அல்லாத ஒன்றால் உங்களுக்கு நடைமுரைப்படுத்திக்காட்ட முடியுமா? ஏன் மேலாடையின்றி வசைபாடும் உங்கள் நாட்டிலாவது ஒரு பெண்ணை ஆபரனங்கலோடு தனியாக பாதையில் அனுப்ப முடியுமா?
முடியவே முடியாது என்று உங்களது உள்மானம் சொல்லுமே..!!
எனவே சுதந்திரம், பாதுகாப்பு என்பது ஒரு பெண்ணுக்கு படைத்த இறைவன் காட்டிய விதிப்படி வாழ்வதால் மாத்திரமே சாத்தியமாகும் என்பதனை ஏற்றுக் கொள்வீர்கள் அல்லவா?
அல்லாஹ்வே போதுமானவன்...அல் ஹம்துலில்லாஹ்...
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
மிக அழகான, ஆழமான பின்னூட்டம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன் ஒரு நொடியில் உலக மக்கள் மனதை எல்லாம் இஸ்லாம் பக்கம் திருப்ப முடியாதா? அப்படி செய்தால் எந்த போராட்டமும் தேவையில்லையே?//
நல்ல கேள்வி சகோ. ஆனால் இதற்கான பதிலை இறைவன் தன் திருமறையில் கூறீட்டானே...
"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46.
"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" - குர்ஆன் 42:13
ஆகுக என்று கூறி அனைவரையும் இஸ்லாத்தின்பால் திருப்பிவிட முடியும் என்றாலும், இறைவன் தான் நாடுவோரை (மட்டுமே) நேர்வழி படுத்துகின்றான். இறைவனால் நாடப்படுவோரில் ஒருவராக ஆகவேண்டுமென்றால் முதலில் நேர்வழியை நோக்கி முன்னோக்கவேண்டும். முன்னோக்குவோமே சகோ..
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன்//
இப்படியாக குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று கூறினால் அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
நன்றி..
மாஷா அல்லாஹ்..அருமையான பதிவு சகோ..இஸ்லாத்தை சிறுமை படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களை அவர்களே மென்மேலும் சிறுமை படுத்தி கொள்கிறார்கள்..
அவர்களில் அரைகுறை ஆடைகள் வக்கிர கண்களுக்கு விருந்தளிக்குமே தவிர, எங்களின் கண்ணியத்திற்கு எந்த குறைவும் ஏற்படப் போவதில்லை..தங்களின் உடல்வனப்பை காட்ட வேறு வழிகளை அவர்கள் தேர்தெடுத்து இருக்கலாம்
எந்த விசயத்தில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பது கூட தெரியாத முட்டாள்கள்..
நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:)
சகோதரர், எந்த எண்ணத்தோடு இந்தக் கேள்வியைக் கேட்டீர்களென்பது புரியவில்லை. படைப்பாளனின் வல்லமைகளை, ஆற்றலை அறிந்து கொள்வதற்காகவா? அல்லது இஸ்லாத்தை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கிலா?. எதுவாக இருந்தாலும், நீங்கள் படைத்தவனின் வல்லமைகளைக் குறைவாக எடை போட்டுவேட்டிருக்கிரீர்கள் என்ற நல்லபிப்பிராரயத்தை மனதில் கொண்டு சில விடயங்களை ஞாபகப்படுத்த முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்..
இவ்வளவு பழமையான உலகத்தை அன்று தொட்டு இன்று வரை ஒரு சீராக இயக்கிக் கொண்டிருக்கும் இறைவன் நிச்சயமாக "ஆகுக" என்ற ஒரே ஒரு சொல்லில் பல படைப்பினங்களை உருவாக்குவதற்கும் சக்தி படைத்தவன் என்பதற்கு அவனது படைப்புக்களே சான்றாக நிற்கின்றன. இப்பிரபஞ்சத்தின் சீரான இயக்கம், பறவைகள்; விலங்குகளின் மாறாக் குணாதிசயங்கள், குறையாத சனத்தொகை வளர்ச்சி, சுவாசம், இதயம், குருதிச்சுற்றோட்டம் இவை எந்த மாறுதல்களும் இல்லாமல் படைக்கப்பட்டது முதல் இறக்கும் வரை இறைவனின் வல்லமையை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. ஏன் மனிதனையும் இந்த படைப்புக்களோடு ஒப்பிட்டு[ பார்க்கிறீர்கள்? மனிதன் தானே அறிவு படைத்தவன் என்று பல சாகசங்களை இவ்வுலகிலேயே நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அப்போ எந்த சிந்திக்கும் திறன்களே இல்லாமல் இயங்கும் இந்த படைப்புக்களும் உலகில் பல அறிவியல் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மனிதனும் சமம் என்கின்றீர்களா? படைப்பாளனும், எல்லா மனிதர்களையும் முஸ்லிமாகவே வாழ வைத்திருந்தால் மேன்மை தங்கிய மனிதனுக்கு உருவானது முதல் இறக்கும் வரை சீராக இயங்கும் அந்த படைப்பினங்களுக்குமுள்ள வித்தியாசத்தை எப்படி அறிந்து கொள்ளலாம்? ஆனால், படைப்பாளனோ! மனிதனுக்கு சத்தியம், அசத்தியம் என்பதனை அறிவதற்கான அனைத்து வகையான வசதிகளையும் இப்பாரிலே ஏற்படுத்திவைத்திருக்கிறான்.
அல்லாஹ்வின் அனைத்து படைப்புக்களிலிருந்தும் வேறுபட்ட மேன்மை தங்கிய படைப்புதான் இந்த மனிதன். மனிதனுக்கு அறிவு என்ற ஒரு அருட்கொடையைக் கொடுத்து இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக அவனது ஏனைய படைப்புக்களைப்பற்றிய அறிமுகத்தையும் கற்பித்து, காலத்துக்காலம் காலம் இறைத் தூதுவர்களையும் அனுப்பி, புவி வாழும் காலம் வரை அழியாத வாழ்க்கை வழிகாட்டியாக ஒரு வேதத்தையும் கொடுத்துள்ளானே...இவை போதாதா மேன்மைதங்கிய மனிதனுக்கு உண்மையான இறை மார்க்கம் எது என்று அறிந்து கொள்வதற்கு..? அறிவென்ற ஒன்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ ஆக்கமான வெளியீடுகளை உருவாக்குவதை விட்டுவிட்டு ஆடம்பரமாகவும், கேளிக்கையாகவும் வாழ்வதற்கு அறிவாற்றலை வீணாக்கும் மனிதனால் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை அறிந்து கொள்ள முடியாது என்கிறீர்களா? மேற்கத்தேய நாடுகளைப் பாருங்கள் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என்று எத்தனைபேர்கள் சாரை சாரியாக இஸ்லாத்தை தனது வாழ்க்கைமுறையாக மாற்றிக் கொள்கிரார்களென்று.. இப்படி எளிமையாக சிந்தனைக்கு ஒத்துப்போகின்ற மார்க்கம் உலகில் வேறெங்குமில்லை. சிந்தித்தால் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கும்போது எதற்காக படைப்பாளனாகிய அல்லாஹ் தனது அதிகாரத்தைக் கொண்டு எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்றவேண்டும்?
இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கிய இறைவனால் "ஆகுக" எனும் ஒரு சொல்லின் மூலம் எந்த படைப்புக்களையும் படைக்க முடியும் என்ற இஸ்லாமிய அறிவியல் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.. ஒரு நொடியில் எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது..உங்களுக்கு எப்படி?
இறுதியாக, எல்லோரையும் ஒரு நொடியில் இஸ்லாமியர்களாக மாற்றினால் ஒரு சிந்தையே இல்லாத ஏனைய படைப்புக்களைப் போன்றவர்களே இருந்திருப்பார்கள்...ஏன் இந்த கேள்வி கேட்கும் நீங்கள் கூட இப்படியான ஒரு முட்டாள் கேள்வியைக் கேட்கக் கூட சிந்தித்திருக்க மாடீர்கள்..
நேரான வாழ்க்கையை அறிந்து கொள்ள உங்கள் சிந்தனைகளைத் திறந்துபாருங்கள்..
நன்றி..